ராஜேஷ்குமாரின் பிரபலமான கிரைம் கதை படமாகிறது - தினசெய்தி 25-09-2026 - Appu Movies

Thursday, September 24, 2026

ராஜேஷ்குமாரின் பிரபலமான கிரைம் கதை படமாகிறது - தினசெய்தி 25-09-2026

 1000-க்கும் மேற்பட்ட கிரைம் நாவல்களை எழுதி பிரபலம் ஆனவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவரின் சில நாவல்கள் திரைப்படமாகவும், வெப் சீரிஸ்களாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

 அந்த வகையில் அவரது மிக முக்கியமான கிரைம் த்ரில்லர்  நாவலை மையமாக கொண்டு 'வயலெட் கனவு' திரைப்படம் உருவாகி வருகிறது.
முற்றிலும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் இப்படத்தை எம் 4 இண்டர்நேஷனல் வழங்கும், அப்பு மூவிஸ் சார்பில் ஏ.முஸ்தரி, மற்றும் பாபு தூயவன் இணைந்து தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவர் பி.நித்யானந்தன் இயக்குகிறார்.

'பாரீஸ் ஜெயராஜ்' படத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடிக்க, 'அங்காரன்' படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர். அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஜெகன் கல்யாண் இசையமைக்கும் இப்படத்திற்கு கீதாகரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.சயீப் படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுதுறார். ஏ.எக்ஸ்.என்.பிரகாஷ் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்க, சவால் ராம் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.தினசெய்தி 25-09-2026
- 
  

No comments:

Post a Comment